Princiya Dixci / 2015 ஒக்டோபர் 02 , மு.ப. 06:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை, காரைதீவு பஸ் தரிப்பு நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை (02) காலை அடையாளம் காணப்படாத முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்தவர், 60 வயதுக்கும் 70 வயதுக்கும் இடைப்பட்டவராக இருக்கலாமென தெரிவிக்கப்படுகின்றது.
இறந்த நபர், அண்மைக்காலமாக காரைதீவு பிரதேசங்களில் நடமாடியதாகவும் இவர் வீடு வீடாகச் சென்று பிச்சை பெற்று வந்தவர் எனவும் ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இம்மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
51 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
3 hours ago