Princiya Dixci / 2016 ஜூன் 06 , மு.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

- எம்.இஸட்.ஷாஜஹான்
ஹெரோய்னை விழுங்கியும் உடலின் இரகசிய இடங்களில் மறைத்தும் இலங்கைக்குக் கடத்தி வந்த பாகிஸ்தான் பெண்கள் இருவரை, கட்டுநாயக்க விமான நிலைய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
ஐம்பது இலட்சம் ரூபாவுக்கு மேல் பெறுமதியுடைய ஹெரோய்ன் போதைப்பொருளையே இவர்கள் இவ்வாறு கடத்தி வந்துள்ளனர்.
இந்தப் பெண்களில் ஒருவர், 25 ஹெரோய்ன் உருண்டைகளை (260 கிராம்) விழுங்கியும் மேலும் சில உருண்டைகளை உடலின் இரகசிய இடத்தில் மறைத்திருந்ததுடன், மற்றைய பாகிஸ்தானியப் பெண், 17 ஹெரோய்ன் உருண்டைகளை (242 கிராம்) விழுங்கி நாட்டுக்குள் கடத்தி வந்துள்ளார்.
போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர், கைதுசெய்யப்பட்ட இவர்களை, நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதித்து போதைப்பொருளை வெளியே எடுத்துள்ளனர்.
சந்தேகநபர்களை, நீர்கொழும்பு பதில் நீதவான் கருணஜீவ கமகே குணதாச முன்னிலையில் ஆஜர்செய்தபோது எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
மேலும் சந்தேகநபர்களுடன் வந்த 06 வயது மற்றும் 03 வயதுடைய சிறுவர்கள் இருவரையும் தாயின் பொறுப்பில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.


14 minute ago
22 minute ago
27 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
22 minute ago
27 minute ago
43 minute ago