2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

ஹெரோயினுடன் இந்தியப் பிரஜை கைது

Kogilavani   / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணம், குருநகரில் இந்தியா குஜராத்தைச் சேர்ந்த ஒருவரை ஹெரோயினுடன்   யாழ்ப்பாணப் பொலிஸார் திங்கட்கிழமை(21) கைதுசெய்துள்ளனர்.  

சந்தேக நபரிடமிருந்து 74 கிராம் நிறையுடைய 16 பைக்கற்கள்  ஹெரோயினை பொலிஸார் மீட்டுள்ளனர்.

மேற்படி நபர்  கைதுசெய்யப்படும் போது, அவ்விடத்திலிருந்து சற்று தூரத்தில் கார் ஒன்றில் இருந்த இலங்கையைச் சேர்ந்த மூவரை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தினர்.

அந்த மூவருக்கும் சந்தேக நபருக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லையென்பது உறுதிப்படுத்தபட்டதையடுத்து, அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .