2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கொலை முயற்சி: குற்றவாளிக்கு 2 வருட கடூழிய சிறை

Kogilavani   / 2012 டிசெம்பர் 04 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)
துப்பாக்கிப் பிரயோகம் செய்து நபர் ஒருவருரை கொலைச்செய்வதற்கு முயற்சித்தவரை குற்றவாளியாக இனங்கண்ட நீதிமன்றம் அவருக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட  இரண்டு வருட கடூழிய சிறைத் தண்டனையை விதித்து தீர்ப்பளித்தது.

வடமத்திய மாகாண மேல்நீதிமன்ற நீதவான் குமார ரத்நாயக்காவே குற்றவாளிக்கு தீர்ப்பளித்தார்.

இதற்கு மேலதிகமாக பாதிக்கப்பட்ட நபருக்கு ஒரு இலட்சம் ரூபாவினை நஷ்ஈட்டுத் தொகையாக வழங்குமாறும், 25 ஆயிரம் ரூபாவினை அபராதத் தொகையாக செலுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

இத்தொகைகளை செலுத்த தவறும் பட்சத்தில் சிறைத்தண்டனையை மேலும் ஒன்றரை வருடங்களுக்கு நீடிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
செனசிலிகம, கோன்கஹவௌ பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கே இவ்வாறு தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

குற்றாவாளி 2009ஆம் ஆண்;டு ஆகஸ்ட் மாதம் 28ஆம்; திகதி அல்லது அதனை அண்மித்த திகதியொன்றில் ரீபீட்டர் வகை துப்பாக்கியினால் தங்கொள்ள பகுதியைச் சேர்ந்த நபரைத் துப்பாக்கிப் பிரயோகம் செய்து பலத்த காயங்களுக்குள்ளாக்கி கொலை செய்ய முற்பட்டுள்ளார்.

அந்த கொலை முயற்சி தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டவரை நீதிமன்றம் குற்றவாளியாக இனங்கண்டே  மேற்படி  தண்டணையை  வழங்கியுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .