2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

புளியங்குளம் சந்தியில் 10 இலட்சம் ரூபா கொள்ளை

Super User   / 2012 ஜூலை 08 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                    (அப்துல்லாஹ்)

பள்ளம பொலிஸ் தொகுதிக்குட்பட்ட புளியங்குளம் சந்தியில்  10  இலட்சம் ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் இன்று நண்பகல் இடம் பெற்றுள்ளது.

போமுகம்மான திவுலபிடிய பிரதேசத்தைச் சேர்ந்த  ஒருவர்,     பள்ளமவிலிருந்து பங்கதெனிய செல்லும் வழியில்  புளியங்குளம்  சந்தியில் காரில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் செக்கிளில் வந்த இனம் தெரியாத இருவர்  தம்மை வழி மறித்து அச்சுறுத்தியதுடன்  காரிலிருந்த 10 இலட்சம் ரூபா பணத்தை  கொள்ளையடித்துச்  சென்றுள்ளதாக பள்ளம பொலிஸில்  முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை  பள்ளம பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .