2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

காத்தான்குடியில் 2கிலோ 500கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது

Kogilavani   / 2012 ஜூன் 16 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்)
மட்டக்களப்பு, காத்தான்குடியில் 2கிலோ 500 கிராம் கஞ்சாவை வைத்திருந்த நபரொருவரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்து நேற்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்துள்ளனர்.

மேற்படி நபர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

சந்தேக நபரை 14 நாட்களுக்கு விளக்க மறியலில் வைக்குமாறு மாவட்ட நீதிபதி என்.எம். அப்துல்லாஹ் உத்தரவிட்டுள்ளார்.

மட்டக்களப்பு உதவி பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரட்ன தலைமையிலான பொலிஸார்  விராசரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X