2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

வாழைச்சேனை புனித திரேசாள் ஆலயத்தில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளது

Kogilavani   / 2012 ஜூன் 11 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                             (ஆர்.அனுருத்தன்)

வாழைச்சேனை புனித திரேசாள் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த 4 உண்டியல்கள் உடைக்கப்பட்டு பெருந்தொகையான பணம் திருடப்பட்டுள்ளமை தொடர்பில் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆலய யன்னல் வழியாக உள் நுளைந்த திருடர்கள் ஆலயத்தினுள் இருந்த பெரிய இரு உண்டியல்களையும் ஆலயத்திற்கு வெளியில் உள்ள பெரிய உண்டியல்களையும் உடைத்து பணத்தை திருடியுள்ளதாக ஆலய நிர்வாக சபையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, அண்மையில் இவ் ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ள புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி
அம்மன் ஆலயத்தில் பல இலட்சம் பெருமதியான நகைகள் திருடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X