2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

நாரஹென்பிட்டியில் 7 வயது சிறுமியின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2012 ஜூலை 01 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


நாரஹென்பிட்டியிலுள்ள கால்வாயொன்றிலிருந்து 7 வயதான சிறுமியொருவரின் சடலம்  கடற்படையினரால் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை  மீட்கப்பட்டுள்ள அதேவேளை, சந்தேகத்தின் பேரில் இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ண குமார் துஷாந்தினி (வயது 7) என இச்சிறுமி அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொழும்பு -5, சித்தார்த்த வீதியிலுள்ள தேவாலயத்தின்  வைபவத்திற்குச்  சென்றுவிட்டு திரும்பியபோது  இச்சிறுமி நேற்று சனிக்கிழமை இரவு காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளையடுத்து இச்சடலம் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. (-சனத் டெஸ்மன்ட்)







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .