2025 ஜூலை 21, திங்கட்கிழமை

புதையல் தோன்றிய 8 பேர் கைது

Kogilavani   / 2013 ஏப்ரல் 05 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.என்.எம்.ஹிஜாஸ்

பள்ளம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆண்டிகம, விலேகம பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட பெண்ணொருவர்; உட்பட 8 பேர் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனியார் தோட்டமொன்றில் இவர்கள் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த போது அதிகாலை 2.30 மணியளவில் பள்ளம பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது நடவடிக்கையின்போது குறித்த இடத்திலிருந்து கெப்ரக வாகனமும்  மோட்டார் சைக்கிள் என்பனவற்றுடன் பூஜைக்கு பயன்படுத்தப்படும் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .