2025 ஜூலை 19, சனிக்கிழமை

18 மில்லியன் கொள்ளை; 5 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்

Super User   / 2013 ஓகஸ்ட் 22 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுபுன் டயஸ்


கம்பஹாவில் 18 மில்லியன் பகல் கொள்ளையில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்களின் முகங்கள் ஸ்ரீலங்கா மேச்சன்ட் கிறடிட் நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமெராவில் தெளிவாக பதிவாகியுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வீடியோவின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் புத்திக சிரிவர்த்தன கூறினார்.

சந்தேகநபர்கள் பற்றிய தகவல்கள் கொடுப்பவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபா சன்மானம் வழங்கப்படுவதுடன் அவர்களின் அடையாளம் இரகசியமாக பேணப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிறுவனத்தினுள் வாகனமொன்றை குத்தகை முறையில் கொள்வனவு செய்ய வந்தவர்போல பாசாங்கு செய்த பிரதான சந்தேகநபர் இதற்கு முன்னரும் பல தடவைகள் இந்த நிறுவனத்திற்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்தான் இந்த கொள்ளையை திட்டமிட்டவர் என நம்பப்படுகின்றது. கொள்ளையர்கள் பற்றிய தகவல்களை 0777923922, 0774784646, 0773917092, 0112911197 என்ற தொலைபேசி இலக்கங்களிற்கு வழங்க முடியும்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X