2026 பெப்ரவரி 23, திங்கட்கிழமை

யாழ். அரியாலையில் நான்கு கடைகளில் திருட்டு, சாவகச்சேரியில் துப்பாக்கி முனையில் கொள்ளை

Super User   / 2012 மே 03 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி, எஸ்.கே.பிரசாத்)

யாழ். அரியாலை மாம்பழச் சந்தியிலுள்ள கடைத் தொகுதியிலிருந்து நான்கு கடைகள் கொள்ளையரினால் இன்று வியாழக்கிழமை அதிகாலை உடைக்கப்பட்டு பெறுமதிமிக்க பொருட்கள் சூறையாடப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இச்சம்பவம் தொடர்பாக கைரேகை பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், கொள்ளையர்கள் திட்டமிட்டு இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த 4 கடைகளில் இருந்து பொறுமதியான இலத்திரணியல் சாதனங்கள் திருடப்பட்டுள்ளதாகவும் சுமார் 15 இலச்சம் ரூபாய் பொறுமதியான கடையிலுள்ள சாமான்கள் திருடப்பட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக யாழ். பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

சாவகச்சேரி மறவன்புலவு மற்றும் தச்சன் தோப்பு பகுதிகளில் கொள்ளை

இதேவேளை, சாவகச்சேரி மறவன்புலவு மற்றும் தச்சன் தோப்பு பகுதிகளில் உள்ள இரு வீடுகளில் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்தவர்களை தாக்கிவிட்டு பெறுமதிமிக்க பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. இதுத் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தச்சன் தோப்பில் வசிக்கும் காசிப்பிள்ளை என்பவரின் வீட்டில் கதவினை உடைத்து உள்ளே புகுந்த மூன்று கொள்ளையர்கள் அங்கிருந்தவர்களை வாள் மற்றும் துப்பாக்கி முனையில் அச்சுருத்தியுள்ளதுடன் குறித்த வீட்டில் இருந்த காசிப்பிள்ளை கெங்காதேவி என்ற பெண்ணின் கைகளை வாளினால் காயப்படுத்திவிட்டு வீட்டிலிருந்த ஏழறை பவுன் நகை மற்றும் பணம் என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இச்சம்பவத்தில் காயமடைந்த பெண் தற்போது யாழ்.போதனா வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றர். இதேவேளை மேற்படி கொள்ளையர்கள் மறவன்புலவுப் பகுதியில் உள்ள தியாகராசா என்பவரின் வீட்டில் புகுந்து அங்கிருந்தும் பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

ரி 56 ரக துப்பாக்கியுடன் முகத்தை கறுப்பு துணிகளினால் கட்டிக்கொண்டு சென்ற இனம் தெரியாத கொள்ளையர்கள் மூவர் இக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக விசாணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பம்வம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X