2025 நவம்பர் 17, திங்கட்கிழமை

கை, வாய் கட்டப்பட்டு பெண் படுகொலை

Menaka Mookandi   / 2012 மே 08 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை பிரதேச வீடொன்றில் தனிமையில் இருந்த பெண்ணொருவரின் கைகள், வாய் கட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவமொன்று நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில், 75 வயதான நந்தாவதி ஆரியதாஸ என்ற பெண்ணே படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் இவரது மரணத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

உயிரிழந்தவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக நாகொட வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஉயிரிழந்தவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக நாகொட வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X