2025 ஜூலை 23, புதன்கிழமை

கம்பளையில் வர்த்தகர் வீட்டில் கொள்ளை

Menaka Mookandi   / 2012 மே 08 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சீ.எம்.ரிஃபாத்)

கம்பளை நகரில் பிரபல வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்குள் புகுந்த இனந்தெரியாதோர் சிலர், அங்கிருந்த சுமார் 23 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள், 18,000 ரூபா ரொக்கப்பணம் ஆகியவற்றைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக கம்பளை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கம்பளை ரயில் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள வர்த்தகரின் மூன்று மாடி வீட்டிலேயே இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த வீட்டின் இரண்டாம் மாடியின் பின்புற கதவினால் உட்புகுந்துள்ள கொள்ளையர்கள், அங்குள்ள அலுமாரியை உடைத்து தங்காபரணங்கள் மற்றும் பணத்தை திருடியிருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற கம்பளை பொலிஸார், மோப்ப நாய்களின் உதவியுடன் தேடுதல் நடத்தியபோதிலும் சந்தேகநபர்கள் எவரையும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .