2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

யுவதியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய விமானப்படை வீரர் கடுகண்ணாவயில் கைது

Menaka Mookandi   / 2012 மே 29 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சீ.எம்.ரிஃபாத்)

கடுகண்ணாவ பொலிஸ் பிரிவிலுள்ள வீடொன்றில் தனிமையில் இருந்த இளம்பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய விமானப்படை வீரர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இந்த சம்பவம் பிலிமதலாவ கரதொட்டவெல்ல பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. 20 வயதான இளம் குடும்பப் பெண் ஒருவரே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு இலக்கானதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

கைதான விமானப்படை வீரர், புத்தளம் - பாலாவி விமானப்படை பிரிவில் பணியாற்றி வருவதாக தெரிவித்த பொலிஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .