2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

வென்னப்புவவில் ஆணின் சடலம் மீட்பு

Menaka Mookandi   / 2012 ஜூன் 26 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.மும்தாஜ்)

வென்னப்புவ, பண்டிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள தும்பு தொழிற்சாலை ஒன்றின் தொழில் புரியும் தொழிலாளி ஒருவர் அத்தொழிற்சாலை அருகில் உள்ள களிமணல் வெட்டும் பள்ளத்தில் நீரில் மிதந்து கொண்டிருந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரவித்தனர்.

குறித்த தும்பு தொழிற்சாலையில் கடமையாற்றும் மற்றொருவரினால் தாக்கப்பட்டே இவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபர் தும்மலசூரிய பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .