2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

பாடசாலையில் கொள்ளையிட்ட நபர் கைது; பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் மீட்பு

Menaka Mookandi   / 2012 ஜூன் 28 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்)

மட்டக்களப்பு, கொக்கடிச்சோலை மீள்குடியேற்ற பிரதேச பாடசாலையொன்றின் கணினி பிரிவிலிருந்து பல இலட்சம் ரூபாய் பெறுமதியான கணினி இயந்திரங்கள் உட்பட பெறுமதியான உபகரணங்களை கொள்ளையிட்ட நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்துடன், அச்சந்தேகநபரால் கொள்ளையிடப்பட்ட உபகணரங்கள், கல்முனை மற்றும் அக்கரைப்பற்று வர்த்தக நிலையங்களில் விற்பனை செய்யப்பட்ட நிலையில் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை ஆஜர்செய்யப்பட்ட போது அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மாவட்ட நீதிவான் என்.எம்.அப்துல்லாஹ் உத்தரவிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .