2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

நீர்கொழும்பில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் கைது

Kogilavani   / 2012 ஜூலை 25 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                            (கே.என்.முனாஷா)
சட்ட விரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில்; ஈடுபட்ட நபர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் கசிப்பு உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட உபரணங்களையும் கைப்பற்றியுள்ளதாக நீர்கொழும்பு ஏத்துக்கால உல்லாசப் பயணத்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

ஏத்துக்கால சாந்த ஜோசப் பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போதே மேற்படி நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது 20 போத்தல் கசிப்பு, 3600 கிராம் கோடா, கசிப்பு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட உபரணங்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக உல்லாசப் பயணத்துறை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர் டி.எஸ் .பி.பெர்னாண்டோ தெரிவித்தார்.

சந்தேக நபர் நாளை வியாழக்கிழமை நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உபபொலிஸ் பரிசோதகர் டி.எஸ்.பி.பெர்னாண்டோ, பொலிஸ் சார்ஜன்ட்களான ஜீனா ஹஸீம், ரூபசிங்க மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்களை கொண்ட குழுவினர் இச்சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .