2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கடுமையாக தாக்கப்பட்டு இளைஞர் கொலை

Super User   / 2012 ஓகஸ்ட் 16 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி, ஹீரெஸ்ஸகலை பிரதேசத்தில் கடுமையாக தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் நேற்று புதன்கிழமை இரவு கொலை செய்யப்பட்டுள்ளார். கடுமையாக தாக்குதலுக்கு உள்ளான குறித்த இளைஞர், கண்டி போதன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி ஹீரெஸ்ஸகலையை சேர்ந்த 26 வயதான ஹேரத் முதியன்சேலகே இன்திக சிரிகாந்த என்ற இளைஞரே உயிரிழந்தவராவர். இது தொடர்பாக கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, மஹாவலி கங்கையின் பேராதெனிய பாலத்திற்கு அருகாமைய்pல் மிதந்து வந்த இனம் தெரியாத நபரின் சடலமொன்றை பேராதெனிய பொலிஸார் இன்று வியாழக்கிழமை காலை கண்டெடுத்துள்ளனர்.

இச்சடலம் யாருடையது என்பதை கண்டறிவதற்கான விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக பேராதெனிய பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .