2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரு பெண்கள் கைது

Menaka Mookandi   / 2013 மார்ச் 01 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.மும்தாஜ்

வீட்டில் வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாகச் சொல்லப்படும் பெண்கள் இருவரை ஆறு கஞ்சா பக்கட்டுக்களுடன் கைது செய்துள்ளதாக சாலியவௌ பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் சாலியவௌ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராஜாங்கனை ஏழாம் கொலணி பிரதேசத்தைச் சேர்ந்த இரு பெண்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வீட்டில் கஞ்சா விற்பனை  நடைபெறுவது தொடர்பில் கிடைத்த தகவலினையடுத்து  கஞ்சா வாங்குவது போன்று வேடமிட்ட பொலிஸார் அங்கு சென்று இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர். சந்தேக நபர்களான பெண்களிடம் தலா 36 கிராம் எடை கொண்ட கஞ்சா பொதிகள் ஆறு பக்கட்டுக்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட ஒரு சந்தேக நபரான பெண்ணின் கணவர் ஏற்கனவே சொகுசு வாகனம் ஒன்றில் கஞ்சா கொண்டு சென்று கொண்டிருந்தவேளை விஷேட அடிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு ராஜாங்கனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் இருவரும் கைப்பற்றப்பட்ட கஞ்சாவுடன் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்ட சாலியவௌ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .