2025 ஜூலை 19, சனிக்கிழமை

வீடு ஒன்றினுள் கொள்ளை: பொலிஸார் விசாரணை

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 06 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

காத்தான்குடி பிரதேசத்திற்குட்பட்ட வீடொன்றினுள் இன்று அதிகாலை கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்

காத்தான்குடி சேர் றாஸீக் பரீட் மாவத்தையிலுள்ள ஹனீபா ஹாஜியார் ஒழுங்கையிலுள்ள வீடொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டிற்குள் நுழைந்த இனந்தெரியாத நபர்கள் வீட்டு உரிமையாளர்கள் மீது மயக்கத்திரவத்தை தெளித்துவிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, டிஜிட்டல் கமரா மற்றும் ஏ.ரி.எம்.அட்டையை என்பவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X