2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

'காயை' கடிக்க முயன்ற மனைவி கைது

Kanagaraj   / 2014 டிசெம்பர் 26 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேருவளை மாகல்கந்த எனுமிடத்தில் தனது, கணவனை கழுத்தை அறுத்து கொலைச்செய்தார் என்ற குற்றச்சாட்டில் அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அவரது மனைவியின் கள்ளக்காதலன் என்று கூறப்படுகின்ற மீனவர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள மீனவர், கொலைச்செய்யப்பட்டவரின் இளைய சகோதரர் என்று விசாரணைகளின் ஊடாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட மனைவி, தடைச்செய்யப்பட்ட ஒருவகையான காயை கடித்து தற்கொலை செய்துகொள்வதற்கு முயன்றார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அவரது மனைவியிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .