Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 பெப்ரவரி 04 , மு.ப. 07:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டம், பார் வீதி சீலமுனைப் பகுதியிலுள்ள வாவியிலிருந்து இளைஞரின் சடலம், புதன்கிழமை (04) மீட்கப்பட்டதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாவியில் சடலம் மிதப்பதைக் கண்டு அப்பகுதி மீனவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இச்சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இந்த சடலம், பத்திகுட்டிகே மில்ரோய் நிரஞ்சன் நோலிஸ் (26) என்பவருடையது என்றும் இவர் ஒரு பிள்ளையின் தந்தை என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கடவத்தையைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தவரான இவர், தமிழ் யுவதி ஒருவரை அண்ணமலையில் திருமணம் செய்துள்ளதாகவும் ஏறாவூர் பகுதியில் உள்ள அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துவந்தாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளர்.
குறித்த இளைஞன் கடந்த 02ஆம் திகதியிலிருந்து காணாமல் போயிருந்தார்.
இவரது சடலத்தை பார்வையிட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி எஸ்.கணேசதாஸ் சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசென்று பிரேத பரிசோதனையை மேற்கொள்ளுமாறு பணித்தார்.
இது தொடர்பான விசாரணையை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
9 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
27 minute ago