Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜூன் 16 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூன்று நாள்களாக காணாமற்போயிருந்த பாடசாலை மாணவியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று (16) காலை 07.30 மணியளவில் லோகல் ஓயாவிலிருந்து குறித்த மாணவியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 14ஆம் திகதியன்று, வீட்டிலிருந்து காணாமற்போயிருந்த நிலையில், அவரது உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் மூன்று நாள்களாகத் தேடப்பட்டு வந்த நிலையில், குறித்த மாணவி பயன்படுத்தியிருந்த பொருள்கள் சில லோகல் ஓயா நீர்த்தேக்கத்துக்கு அருகிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டன.
இதன்போது அங்கு தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்ட போது, மாணவியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
25 minute ago
26 minute ago
36 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
26 minute ago
36 minute ago
1 hours ago