Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 செப்டெம்பர் 18 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரண்டு பாதாள உலகக்குழு உறுப்பினர்களை சுட்டுக்கொல்வதற்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கைத்துப்பாக்கி மற்றும் மெகசின் என்பவை, நவகமுவவில் நேற்று மீட்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட குறித்த துப்பாக்கியை பயன்படுத்தி ஹங்வெல்ல பகுதியில் வஜிர குமார மற்றும் சுரேஷ் ரவந்த அல்லது சூட்டி மல்லி ஆகிய இருவரும் கடந்த வாரம் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் 4 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவமானது, சிறைச்சாலையில் உள்ள பாதாள உலகத் தலைவர் மெலன் மாபுலா அல்லது 'உருஜுவா' என்பவரால் அலைபேசி அழைப்பு ஊடாக கையாளப்பட்டதாக நம்பப்படுவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .