Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஓகஸ்ட் 14 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.கணேசன்)
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிந்துலை மட்டுக்கலை 7 ஆம் இலக்க கொலணி பகுதியிலிருந்து சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய குறித்த சடலம் இன்று பிற்பகல் (14) மீட்கப்பட்டுள்ளது.
நுவரெலியா வைத்தியசாலையில் அதிக குருதிப்பெருக்குக் காரணமாக அனுமதிக்கப்பட்ட 23 வயதுடைய யுவதி தொடர்பில் வைத்தியர்கள் நுவரெலியா பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதற்கமைய சிசு உயிரிழந்த நிலையில் தோட்டத்தில் புதைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பொலிஸார் நீதிமன்ற உத்தரவிற்கமைய சிசுவின் சடலத்தை மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சிசுவை பெற்றெடுத்த தாய் மற்றும் சிசுவை தோட்டத்தில் புதைக்க உதவி புரிந்த பெண் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த லிந்துலை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago