Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜூலை 24 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
வனாத்தவில்லு, லெக்டோ தோட்டத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் தங்கியிருந்த 6 பேர், வனாத்தவில்லு பொலிஸாரால், கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை 2 மணியளவில் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, தெரிவிக்கப்படுகின்றது.
ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்புடைய, பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களால், லெக்டோ பகுதியில் புதைக்கப்பட்டிருந்த ஒரு தொகை வெடிப்பொருள்கள் இந்தாண்டு ஜனவரி மாதம் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைப்பற்றப்பட்டிருந்தது.
இந்த நிலையில், குறித்த லெக்டோ தோட்டத்துக்குச் செல்ல அதன் உரிமையாளருக்கு மட்டுமே நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், சட்டவிரோதமாக அங்கு தங்கியிருந்த 6 சந்தேகநபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தாம் பயணித்த வாகனம் பழுதடைந்தமையாலேயே குறித்த தோட்டத்துக்குள் செயன்றதாக சந்தேகநபர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வனாத்தவில்லு பொலிஸார் முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago