Kogilavani / 2016 ஜூலை 21 , மு.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகலிங்கம் கோபிகிருஷ்ணா
'யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவந்த மஹிந்த ராஜபக்ஷதான் நல்லிணக்கத்தை ஏற்படுத்தினார். ஒற்றை ஆட்சியின் கீழ் நாட்டைக் கொண்டு நடத்திய அக்காலத்தில் கூட, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டிருக்கவில்லை. அப்பல்கலைக்கழகத்தில் கல்விபயிலும் சிங்கள மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துவதா நல்லிணக்கம்' என்று, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கேள்வியெழுப்பினார்.
நாடாளுமன்றத்தில், நேற்றுப் புதன்கிழமை வாய்மொழிமூல விடைக்கான வினாக்கள் நேரத்தின்போது, தேசிய நல்லிணக்கச் செயலாற்றுப் படையணி என்ற ஒன்று நிறுவப்பட்டுள்ளதா என கேள்வியெழுப்பியிருந்த விமல்
எம்.பி, குறுக்குக் கேள்விகளையும் கேட்டார்.
இதற்குப் பதிலளித்த பிரதமர், தேசியப் படையணியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா செயற்படுவது தொடர்பில் தனக்குத் தெரியாது எனவும் அவ்வாறான ஊடக அறிக்கைகளைப் பார்த்திருக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவை முன்பிருந்தே எனக்குத் தெரியும். இருவரும் இணைந்து நடனப் பள்ளியில் கற்றுக் கொண்டோம்;. 'எமது இராணுவத்தினர், யுத்த நீதிமன்றத்துக்குச் செல்வதற்கு, ஐ.நா செயலாளர் நாயகத்துடன், கடந்த ஆட்சியிலேயே ஒப்பந்தம் செய்யப்பட்டது' என்று சுட்டிக்காட்டினார்.
அதற்குப் பதிலளித்த விமல் எம்.பி, 'நல்லிணக்கத்தை மஹிந்த தான் ஏற்படுத்தினார். ஒற்றை ஆட்சியின் கீழ் நாட்டைக் கொண்டு நடத்தி, நல்லிணக்கத்தை ஏற்படுத்தினார்.
யுத்த நீதிமன்றம் இல்லை என்றோம்' எனத் தெரிவித்ததோடு, மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மோதல் காணப்பட்டிருக்கவில்லை, போலியான நல்லிணக்கமே ஏற்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களை தாக்குவதா நல்லிணக்கம் என்றும் வினவியதுடன் இந்தப் பிரதமர் ரணிலின் காலத்தில் தான் அது ஏற்பட்டுள்ளது எனச் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, காத்திரமான வினாவுக்கு, தேவையற்ற பதில்களை வழங்குவதாகவும் பிரதமர் மீது, அவர் குற்றஞ்சாட்டினார்.
மீண்டும் எழுந்த பிரதமர், 'தேசிய நல்லிணக்க செயலாற்றுகைப் படையணி என்ற ஒன்று இல்லை என்று தான் சொன்னேன். 2012ஆம் ஆண்டு, தருஸ்மனுடன் „டீல்... போட்டீர்கள்' என்று தெரிவித்ததோடு, யுத்தத்தின் போது இரு தரப்பிலும் பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார்.
எனினும், யுத்த நீதிமன்றத்துக்கு மஹிந்த ராஜபக்ஷ இணங்கியிருக்கவில்லை எனத் தெரிவித்த விமல் வீரவன்ச, இவ்வாறனதொரு பிரதமர், உலகத்திலேயே கிடையாது எனத் தெரிவித்ததோடு, கேள்விகளைக் கேட்டுப் பயனேதும் இல்லை எனவும் சலித்துக் கொண்டார்.
அவருக்குப் பதிலை வழங்கிய பிரதமர் ரணில், 2011ஆம் ஆண்டு, ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம், யுத்த நீதிமன்றத்துக்கு இணக்கம் காணப்பட்டதாகவும், இலங்கை தொடர்பான ஐ.நாவின் சுயாதீன விசாரணையை மேற்கொண்ட தருஸ்மனுடன், அப்போதைய பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் மேற்கொண்ட கலந்துரையாடல்களை வெளிப்படுத்தினால், உண்மை புலப்படுமெனவும் தெரிவித்தார்.
3 minute ago
8 minute ago
33 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
8 minute ago
33 minute ago
35 minute ago