Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மார்ச் 07 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.நிரோஷினி
நாட்டில் முஸ்லிம்களின் பாதுகாப்பை உடன் உறுதிப்படுத்தி, அம்பாறை மற்றும் கண்டி வன்முறைச் சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நேற்று, நாடாளுமன்றத்தின் சபை நடுவில் அமர்ந்து எதிர்ப்பை வெளியிட்டனர்.
முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளுக்கு உரிய நடவடிக்கையெடுப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் உறுதியளித்ததைத் தொடர்ந்தே, அவர்கள் எழுந்து சென்றனர்.
அம்பாறை மற்றும் திகன ஆகிய இடங்களில் இனவாதச் சம்பவங்கள் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் நேற்று (06) சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் நடைபெற்றது.
நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன ஆகியோரது உரைகளைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் உரையாற்றும்போதே, சபை நடுவே வந்தமர்ந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற சம்பவங்களுக்குத் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
இதனிடையே ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, சபைக்கு நடுவே தானும் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக எச்சரிக்கை விடுத்தார்.
இதனிடையே கருத்துரைத்த சபாநாகர் கரு ஜயசூரிய தெரிவிக்கையில்,
“உறுப்பினர்களே, நாட்டில் சட்டம், ஒழுங்கை ஏற்படுத்தி, மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுத் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இன்று (செவ்வாய்) காலைகூட இரண்டு தடவைகள் நான் பொலிஸ்மா அதிபருடன் பேச்சு நடத்தினேன். சிந்தித்துச்செயற்படவேண்டிய தருணம் இது. எம்.பிக்களான நீங்களும் இவ்வாறு செயற்படக்கூடாது. பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஒத்துழைப்பு தாருங்கள். இல்லையேல் சபை ஒத்திவைக்கப்படும்” எனத் தெரிவித்தார்
அதன்பிறகு பிரதமரும், இச்சம்பவம் தொடர்பில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அதன் பின்னரே, அவர்கள் எழுந்து சென்றனர்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய எம்.பிக்களுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பிக்களான முஜிபூர் ரஹ்மானும், இம்ரான் மஹ்ரூப்பும் பங்கேற்றனர். இதில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள முஸ்லிம் உறுப்பினர்கள் பங்கேங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
9 hours ago
18 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
18 Oct 2025