2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

'பிரதமர் இராஜினாமா செய்ய வேண்டும்'

Niroshini   / 2016 நவம்பர் 21 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அழகன் கனகராஜ்

மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறை மோசடி விவகாரம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே பொறுப்பு கூறவேண்டும். அவர் பிரதமராக இருக்கும் வரையிலும் இந்த பிணைமுறி விவகார பிரச்சினைக்கு தீர்வு காணப்படமாட்டாது என்பதால், பிரதமர் இராஜினாமா செய்யவேண்டும் என்று ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்றுத் திங்கட்கிழமை இடம்பெற்ற வரவு-செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நோய்களை நன்றாக விபரிக்கும் வகையிலேயே வரவு-செலவுத் திட்டம் உள்ளது. எனினும், சிகிச்சையளிப்பதற்கு மருத்துக்கள் அரசாங்கத்திடம் இல்லை. தாய் நாட்டை பாதுகாப்பதற்காக உயிரிழந்தவர்கள், தற்போது சாபமிட்டு, சவக்குழிகளிலிருந்து எழுந்துவருகின்றனர்.

துறைமுகத்துக்கு கப்பல்கள் வரவில்லை, விமான நிலையத்துக்கு விமானம் வரவில்லை அப்படியிருந்த நிலையில், ஐ.தே.க ஆட்சிபீடம் ஏறியபோது, கப்பல்களும் விமானங்களும் வந்ததாகக் கூறப்படுகின்றது. இது பொய்யாகும். எமது ஆட்சியில் மேற்கொண்ட நிர்மாணத்தில்தான் இவ்வாறான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

நீங்கள்(ரணில்) பிரதமராக இருக்கும் வரையிலும் பிணைமுறி விவகாரம் முடிவுக்கு கொண்டுவரப்படாது. சட்டமாஅதிபர் திணைக்களம் மற்றும் இலஞ்சம் ஊழல் ஒழிப்பு திணைக்களங்கள் உங்களுடைய ஆலோசனையின் கீழே செயற்படுகின்றது.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனின் உங்கள் நண்பன், நீங்கள் பிரதமராக இருக்கும் வரையிலும் பிணைமுறி விவகாரத்துக்கு முடிவு கிடைக்காது. ஆகவே, பிரதமர் பதவியிலிருந்து நீங்கள்(ரணில்) இராஜினாமா செய்யவேண்டும் என்றும் கோரிநின்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .