2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

கிருமிநாசினிகள், பீடி இலைகள் மீட்பு

Janu   / 2026 மே 10 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடல் மார்க்கமாக இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட பெரும் அளவிலான கிருமிநாசினிகள், விதைகள் மற்றும் பீடி இலைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

விமானப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, புத்தளம் - கந்தகுளி விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. கந்தகுளி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையின் போதே குறித்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. கைப்பற்றப்பட்ட கிருமிநாசினிகள், விதைகள் மற்றும் பீடி இலைகள் மேலதிக விசாரணைகளுக்காகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளை கந்தகுளிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .