Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஜூன் 05 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாடசாலைகளுக்கிடையிலான 2025 ஆம்ஆண்டிற்கான விளையாட்டுப் போட்டியில் 17 வயதுக்குட்பட்ட கரம்போட்டியில் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/லீடர் எம்.எச்.எம் அஸ்ரப் வித்தியாலய பெண்கள் அணி கலந்து கொண்டு வலய மட்டத்தில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டு மாகாண மட்டப்போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
இவ் வெற்றிக்கான மாணவர்களுக்கு பயிற்சி அளித்த இந்த பாடசாலையின் விளையாட்டு ஆசிரியர் எம்.எப்.எம். றிபாஸ்,விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் எம்.என்.எம். ஆபாக்,பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீன், பிரதிஅதிபர்எஸ்.எம். சுஜான், உதவிஅதிபர்எம்.எப்.எம்.ஆர்ஹாத்தீம் ஆகியோர்களுக்கு பாடசாலை சமூகத்தினர் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
இப் பாடசாலை கடந்த ஆண்டும் விளையாட்டுப் போட்டிகளில் பல வெற்றிகளை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இப் பாடசாலை இவ்வாண்டுக்கான கோட்ட மட்ட மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டிகளில் மொத்தமாக 48 வெற்றி இடங்களை தன்வசப்படுத்தி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நூருல் ஹுதா உமர்
20 minute ago
24 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
24 minute ago
26 minute ago