2021 ஜூலை 27, செவ்வாய்க்கிழமை

அஸ்தன் வில்லாவிடம் தோற்ற செல்சி

Shanmugan Murugavel   / 2021 மே 24 , மு.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், அஸ்தன் வில்லாவின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில், 1-2 என்ற கோல் கணக்கில் செல்சி தோற்றது.

செல்சி சார்பாகப் பெறப்பட்ட கோலை பென் சில்வெல் பெற்றதோடு, அஸ்தன் வில்லா சார்பாக, பேர்ட்ரன்ட் ட்ரரோரே, அன்வர் எல் கஸி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இந்நிலையில், லெய்செஸ்டர் சிற்றியின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில், 4-2 என்ற கோல் கணக்கில் டொட்டெஹாம் ஹொட்ஸ்பர் வென்றது. டொட்டென்ஹாம் சார்பாக, கரெத் பேல் இரண்டு கோல்களையும், ஹரி கேன் ஒரு கோலையும் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது. லெய்செஸ்டர் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் ஜேமி வார்டி பெற்றிருந்தார்.

இதேவேளை, சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றியின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும், எவெர்ற்றனுக்குமிடையிலான போட்டியில், 5-0 என்ற கோல் கணக்கில் சிற்றி வென்றது. சிற்றி சார்பாக, சேர்ஜியோ அகுரோ இரண்டு கோல்களையும், கெவின் டி ப்ரூனே, கப்ரியல் ஜெஸூஸ், பில் பொடென் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .