Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 30 , பி.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 3 டீ 20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரின் 2 ஆவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி 9 விக்கெடுக்காலாள் வெற்றிபெற்றது.
இந்த போட்டி பிரிஸ்பேனில் இன்று ஆரம்பமானதையடுடுத்து நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணிமுதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்திருந்தது.
அத்துடன் நேற்றைய தினம் மூன்று வீரர்களை மாற்றிகொண்டு இலங்கை அணி களமிறங்கியிரு்நததுடன்,ஓசத பெர்னாண்டோ, பஹானுக ராஜபக்ஷ, கசன் ரஜிதா, ஆகியோருக்குப் பதிலாக அவிஷ்க பெர்னாண்டோ, நிரோசன் திக்வெல்ல ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டிருந்தனர்.
மறுமுனையில் அவுஸ்திரேலிய அணியில் ஸ்டார்க்க்கு பதிலாகப் பில்லி ஸ்டான்லேக் இடம்பெற்றார்.
இந்நிலையில் இலங்கை அணி வீரர்கள் முதலில் துடுப்பெடுத்தாடினர். குசல் மெண்டிஸ் ரன் அவுட்டில் வெளியேறினார். இதனையடுத்து குணதிலக - அவிஷ்க பெர்னாண்டோ ஜோடி நிதானமாக ஆடினர். குணதிலக 21 ஓட்டங்களிலும் அவிஷ்க பெர்னாண்டோ 17 ஓட்டங்களிலும் குசல் பெரேரா 27 ஓட்டங்களிலும் வெளியேற அடுத்து வந்த வீரர்கள் சிறிய ஓட்ட எண்ணிக்கைகளுக்கு ஆட்டமிழந்தனர்.
இலங்கை அணி 19 ஓவரில் 117 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அவுஸ்திரேலிய அணி தரப்பில் பில்லி ஸ்டான்லேக், ஆஷ்டன் அகர், ஆடம் ஜம்பா, கம்மின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
118 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அவுஸ்திரேலியா அணி களமிறங்கியிருந்த அவுஸ்திரேலிய அணி ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலங்கை அடைந்தது, அவ்வணி சார்பில் டேவிட் வோர்னர் 64 ஓட்டங்களையும், ஸ்டீவ் ஸ்மித் 53 ஓட்டங்களையும் பெற்றுகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
5 hours ago