R.Tharaniya / 2025 செப்டெம்பர் 24 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் கால்பந்தாட்ட லீக் புத்தளத்தில் தொடராக நடாத்தி வந்த கால்பந்தாட்ட தொடரில் புத்தளம் நகரில் மிகப் பழமை வாய்ந்த போல்டன் கழகம் 29 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு வெற்றி கிண்ணத்தை தனதாக்கி சாதனை படைத்திருக்கின்றது.
இந்த தொடரின் பரபரப்பான இறுதிப் போட்டி அண்மையில் புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது.
இந்த இறுதிப் போட்டியில் புத்தளம் நகரில் மிகப் பழமை வாய்ந்த அணிகளான நியூ ஸ்டார்ஸ் அணியும், போல்டன் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் இடைவேளைக்கு முன்பு எந்த அணிகளும் கோல்களை பெறாத நிலையில் இடைவேளைக்குப் பின்பு போல்டன் அணி அதிரடியாக மூன்று கோல்களை தொடராக பெற்றுக் கொண்டது.
போல்டன் அணிக்காக அவ் அணியின் வீரர்களான முஹம்மது முர்ஷித், முஹம்மது அலி, முஹம்மது ரிபாஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோல்களை பெற்றுக் கொடுத்தனர். போல்டன் அணியை அதன் முன்னாள் வீரர் எம்.எம். நிஸ்வர் வழி நடத்தி இருந்தார்.
லீக் தலைவர் முஹம்மது யமீன் தலைமையில் நடைபெற்ற அதன் பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் மாநகர சபையின் மேயர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத் கலந்து கொண்டதோடு பிரதி மேயர் நுஸ்கி நிஸார் உள்ளிட்ட மாநகர சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
எம்.யூ.எம்.சனூன்

5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago