R.Tharaniya / 2025 மே 15 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் எதிர்வரும் 17ஆம் திகதி முதல் மீண்டும் தொடங்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவியதை தொடர்ந்து 18-வது ஐபிஎல் தொடர் கடந்த 8-ம் திகதி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
அன்றைய தினம் பஞ்சாப் - டெல்லி அணிகள் இடையிலான ஆட்டம் தரம்சாலாவில் நடைபெற்று கொண்டிருந்தது. 10.1 ஓவர்களில் இந்த ஆட்டம் நிறுத்தப்பட்டு மைதானத்தில் இருந்த ரசிகர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து ஐபிஎல் தொடர் ஒருவார காலத்துக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது.
எதிர்வரும் வரும் 17ஆம் தேதி முதல் எஞ்சியிருக்கும் போட்டிகளை ஆறு இடங்களில் நடத்துவது என்றும், ஜூன் 3ஆம் திகதி இறுதிப் போட்டியை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

30 minute ago
41 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
41 minute ago
1 hours ago
2 hours ago