Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Freelancer / 2024 மே 10 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
33ஆவது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பெரிசில் ஜூலை 26ஆம் திகதி தொடங்க உள்ளது. ஆகஸ்ட் 11ஆம் திகதி வரை நடைபெறும் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 10,000த்திற்கும் அதிகமான வீர, வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
2024 ஒலிம்பிக் போட்டிக்கான ஜோதி, கடந்த ஏப்ரல் மாதம் கிரீஸ் நாட்டில் உள்ள வரலாற்று புகழ் வாய்ந்த ஆடுகளமான ஒலிம்பியாவில் ஏற்றப்பட்டது. பின்னர் கிரீஸ் முழுவதும் கொண்டு செல்லப்பட்டு, பிரான்ஸ் ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக் குழுவிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.
அங்கிருந்து பில்லம் என்ற பாரம்பரியமிக்க 3 அடுக்கு பாய்மர படகு மூலமாக பிரான்சுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், 12 நாட்கள் கடல் பயணத்திற்கு பிறகு ஒலிம்பிக் ஜோதி பிரான்ஸின் மார்செய் நகரை வந்தடைந்தது.
ஏராளமான சிறிய படகுகள் புடைசூழ ஜோதியை சுமந்து வந்த பாய்மர படகு, விழாக்கோலம் பூண்டு இருந்த துறைமுகத்திற்குள் வந்தது. பின்னர் அணையாமல் கொண்டு வரப்பட்ட ஜோதி அடங்கிய விளக்கில் இருந்து ஒலிம்பிக் ஜோதி சுடர் மாற்றப்பட்டது.
இதையடுத்து, ஒலிம்பிக் ஜோதிக்கு கண்கவர் வான வேடிக்கைகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், 2012ஆம் ஆண்டின் ஒலிம்பிக் நீச்சல் செம்பியன் பிளாரென்ட், 2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பாரா ஓலிம்பிக் தடகள வீரர் நான்டெனின் ஆகியோர் ஒலிம்பிக் தீபத்தை எடுத்து வந்தனர்.
பின்னர், அதை மார்செய்லி நகரத்தில் பிறந்த இசை கலைஞர் ஜூல் என்பவரிடம் வழங்கினார். அவர், அங்கு திரண்டிருந்த ஏராளமான பொதுமக்கள் முன் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றினார்.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
35 minute ago
38 minute ago
41 minute ago