Ilango Bharathy / 2022 ஜனவரி 19 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜிவி பிரகாஷின் ‘டார்லிங்‘ திரைப் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி.
அதனை தொடர்ந்து அவர் ‘யாகாவாராயினும் நாகாக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்,கடவுள் இருக்கான் குமாரு, மொட்டசிவா கெட்டசிவா, மரகத நாணயம்‘ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் சொகுசு குடியிருப்பில் வசித்து வரும் அவர் அண்மையில் அண்ணாசாலை பொலிஸ் நிலையத்தில் ”தனது வீட்டில் பணிபுரிந்து வந்த தனுஷ் என்பவர் தனது வீட்டிலிருந்து சில பொருட்களை திருடி சென்றுவிட்டார் எனவும் குறிப்பாக தனது ஆடைகள் மற்றும் தான் பயன்படுத்தி வந்த கெமரா ஆகியவற்றை திருடி சென்றுவிட்டதாகவும் புகார் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து பொலிஸார் நிக்கிகல்ராணி வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அதில் தனுஷ் பொருட்களைத் திருடிச் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதனையடுத்து திருப்பூரில் மறைந்திருந்த தனுஷை பிடித்து விசாரித்த பொலிஸார் குறித்த நபரிடமிருந்து கேமரா மற்றும் நடிகை நிக்கி கல்ராணியின் ஆடைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
இந்நிலையில் பொருட்கள் திரும்ப கிடைத்ததை அடுத்து தனுஷ் மீது கொடுத்த வழக்கை வாபஸ் பெற நிக்கி கல்ராணி முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
7 minute ago
31 minute ago
40 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
31 minute ago
40 minute ago
44 minute ago