2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் யார்?

Editorial   / 2019 செப்டெம்பர் 13 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேறிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த வார எவிக்சன் பட்டியலில் கவின், சாண்டி, தர்ஷன், ஷெரின் மற்றும் வனிதா ஆகியோர் உள்ளனர். 

இந்த ஐவரில் ஒருவர் இந்த வாரம் வெளியேற்றப்டுவார்கள்

இந்த நிலையில் தற்போது வரை கிடைத்துள்ள வாக்குகளின் அடிப்படையில் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தில் கவின் உள்ளார். அவரை அடுத்து சாண்டி, தர்ஷன் ஆகிய இருவரு ம் உள்ளனர்

ஷெரின் மற்றும் வனிதா ஆகிய இருவரும் கடைசி இரண்டு இடங்களில் உள்ளனர். குறிப்பாக மிக குறைந்த வாக்குகளை மட்டுமே வனிதா பெற்றுள்ளார். எனவே இந்த வாரம் வனிதா வெளியேற அதிக வாய்ப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே ஒரு முறை மக்களால் வெளியேற்றப்பட்ட வனிதாவை போட்டியின் விறுவிறுப்பை கருதி மீண்டும் பிக்பாஸ் அழைத்து வந்தார். 

ஷெரின், தர்ஷன் விவகாரத்தில் வனிதா கொஞ்சம் ஓவராக நடந்துகொண்டதால் வனிதாவின் மீதான வெறுப்பு அதிகமாகியது. இதனால்தான் அவருக்கு இரண்டாவது முறை வாய்ப்பு கிடைக்கும் அந்த வாய்ப்பை அவர் பயன்படுத்தாமல் வெளியேற்றப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்

கடந்த இரண்டு நாட்களாக வனிதா சரியாக விளையாடினாலும் இதனை அவர் ஆரம்பத்தில் இருந்தே செய்திருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் கருத்தாக உள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .