George / 2015 நவம்பர் 29 , மு.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹொலிவூட்டின் இளம் கவர்ச்சி கன்னியான ஜெனிபர் லோரன்ஸ், புதிய திரைப்படமொன்றை இயக்கவுள்ளாராம்.
ஜெனிபர் லோரன்ஸ் நடித்து உலக புகழ் பெற்ற த ஹங்கர் கேம்ஸ் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகி பொக்ஸ் ஓபிஸ் ஹிட் அடித்துள்ளது.
இந்நிலையில், தற்போது ஒரு புதிய திரைப்படத்தை இயக்கப்போவதான ஜெனிபர் லோரான்ஸ் தெரிவித்துள்ளார்.
2012ஆம் ஆண்டு வெளியான பிரபல பிளக் கெமடி நாவலான ப்ராஜெக்ட் டெலிரியத்தை தான் அவர் திரைப்படமாக இயக்கப்போகிறாராம்.
25 வயதாகும் ஜெனிபருக்கு இயக்குநராக வேண்டும் என்பது சின்ன வயது கனவாம். தனது 16ஆம் வயதில் இருந்து இயக்குநருக்கு தேவையான பயிற்சிகளையும் பெற்று வந்துள்ளாராம்.
ஹொலிவுட்டில் தற்போது 'பேசன்ஜர்ஸ்' மற்றும் 'எக்ஸ் மேன் அப்போகலிப்ஸ்' ஆகிய திரைப்படங்களில் பிசியாக நடித்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025