2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

உடல் எடை குறைந்தது ஏன்?; ரோபோ விளக்கம்

Janu   / 2023 ஜூன் 12 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொலைகாட்சியில் மிமிக்ரி கலைஞராக இருந்து சினிமாவுக்குள் நுழைந்து தடம் பதித்தவர் ரோபோ சங்கர் பிரபல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.  சினிமா தவிர்த்து தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலும் நடுவராக பங்கேற்று வந்தார் ரோபோ சங்கர்.

சமீபகாலமாக அவரது உடல் மிகவும் மெலிந்து காணப்பட்டது. பலரும் அவரது புகைப்படங்களை பகிர்ந்து ரோபோ சங்கருக்கு என்னவானது என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில் தனது உடல் எடை குறைந்தது குறித்து முதல் முறையாக மௌனம் கலைத்துள்ளார் ரோபோ சங்கர். யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது

“நான் உடல் எடையை குறைப்பதற்காக டயட் இருந்தபோது எனக்கு மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக எனது உடல் எடை வெகுவாக குறைந்துவிட்டது. சரியான நேரத்தில் நான் நல்ல மருத்துவர்களிடம் சென்றதால் அவர்கள் என்னை நன்றாக கவனித்துக் கொண்டனர். என்னுடைய மனைவியும் குழந்தைகளும் தான் என்னுடைய கடினமான நேரத்தில் எனக்கு உறுதுணையாக இருந்தனர். அதனால் தான் என்னால் விரைவில் மீண்டு வர முடிந்தது.” என்றார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X