J.A. George / 2022 டிசெம்பர் 13 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடினார். வழக்கம் போலஅவரது ரசிகர்கள் பிரமாண்டமாக கொண்டாடியிருந்தனர்.
ரஜினி சில ஆண்டுகளாகத் தனது போயஸ் தோட்ட வீட்டுக்கு வரும் ரசிகர்களைச் சந்தித்து வருவதை ரஜினி வழக்கமாக வைத்திருக்கிறார்.
காலையில் போயஸ்கார்டன் பகுதியே ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும். காலை 9 மணி அளவில் வீட்டிற்குள் இருந்து ரஜினி வெளியே வந்து ரசிகர்களைப் பார்த்துக் கையசைப்பார். இது வழக்கமான காட்சி என்பதால் இந்த ஆண்டும் ரஜினி தனது ரசிகர்களை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியானது.
இதனால் ஏராளமான ரசிகர்கள் வீட்டின் முன்பாக வாழை மரங்கள் தோரணங்கள் கட்டப்பட்டு, அதிகாலையில் முதலே ரசிகர்கள் ரஜினியின் வருகைக்கு காத்திருந்தனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவி லதா, ரஜினி ஊரில் இல்லை அவர் சார்பாக அனைத்து ரசிகர்களுக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று செய்தியாளர்களை சந்தித்து கூறினார்.
இதனால் ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.
12 minute ago
16 minute ago
30 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
16 minute ago
30 minute ago
39 minute ago