Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 மே 10 , மு.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
விஜய்யுடன் தெறி, சூர்யாவுடன் 24 என தொடர்ச்சியாக இரண்டு ஹிட் திரைபடங்களில் நடித்து விட்ட சமந்தா, இன்னும் சிறிது காலத்துக்கு புதிய திரைப்படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.
'இன்று இரவு மன நிறைவுடன் தூங்குவேன். என்னுடைய கோடைக் கால திரைப்படங்கள் வெளியாவது முடிவடைந்துவிட்டது. மிகவும் நீளமான கடினமான 8 மாதங்கள். ஓய்வேயில்லாத சோர்வான நாட்கள் முடிவுக்கு வந்தன. எல்லாவற்றிலும் எனக்கு பக்கபலமாக இருக்கும் என்னுடைய குடும்பத்தாருக்கு நன்றி.
நான் சரியான மகளாகவும், சரியான தோழியாகவும், சரியான பெண் தோழியாகவும் இந்த சமயத்தில் இல்லாமல் போய்விட்டேன். சில விடயங்களை இனி மெதுவாகச் செய்யவுள்ளேன். கொஞ்ச நாளைக்கு புதுத் திரைப்படங்களில் நடிக்க சம்மதிக்கப் போவதில்லை,' என டுவிட்டரில் சமந்தா குறிப்பிட்டுள்ளார்.
தமிழில் தெறி, 24 ஹிட் மகிழ்ச்சி ஒருபக்கம் இருக்க, தெலுங்கிலும் முன்னணி நடிகர்களான மகேஷ்பாபு, நிதின் ஆகியோருடனும் நடித்து முடித்துவிட்டார். இவர்களுடன் நடித்த 'பிரம்மோற்சவம், அ...ஆ...' ஆகிய இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.
அத்துடன், தெலுங்கில் ஜன்தா கேரேஜ், தமிழில் வட சென்னை என தலா ஒரு திரைப்படத்தை தன் கைவசம் வைத்துள்ளார். வட சென்னை திரைப்படத்தின் படபிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் ஆரம்பமாகவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .