George / 2016 மே 31 , பி.ப. 01:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஜினி திரைப்படம் வெளியாகிறது என்றால் அந்த தினத்தில் மற்றத் திரைப்படங்களை வெளியிடத்தான் பயப்படுவார்கள்.
ஆனால், ரஜினி திரைப்பட இசை வெளியீட்டுக்கே பயந்து, 'ரெமோ' திரைப்படத்தின் முதல் பார்வையை அன்றைய தினத்தில் வெளியிடுவதிலிருந்து பின் வாங்கியுள்ளார்கள்.
'கபாலி' படத்தின் இசை வெளியிடு வரும் ஜூன் 9ம் திகதி நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதனால் அன்று 'கபாலி' பற்றிய பேச்சுக்கள்தான் அதிகமாக இருக்கும், அதை மீறி வேறு எதைப் பற்றியும் பேச்சுகள் வராது என்பதால் அன்று வெளியிடுவதாக சொல்லப்பட்டிருந்த 'ரெமோ' திரைப்படத்தின் முதல் பார்வையை சில நாட்கள் கழித்து வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.
'கபாலி'இசை வெளியீட்டுக்கே இப்படி என்றால் இன்னும் 'கபாலி' திரைப்படம் வெளிவரும் போது எத்தனை பேர் எவற்றில் இருந்து எல்லாம் பின்வாங்கப் போகிறார்களோ தெரியவில்லை.
15 minute ago
45 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
45 minute ago
1 hours ago
2 hours ago