S.Renuka / 2026 பெப்ரவரி 10 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக மட்டுமல்லாமல், தனிப்பட்ட வாழ்க்கையிலும் தனித்துவமான பாதையை தேர்வு செய்து பயணிப்பவராக அறியப்படுபவர் அஜித் குமார். நடிப்பு, புகழ், ரசிகர் கூட்டம் என்ற எல்லைகளைத் தாண்டி, தனது வாழ்நாளில் உண்மையாக விரும்பிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருபவர் என்ற பெயர் அவருக்கு உண்டு. அந்த வகையில், கடந்த சில மாதங்களாக அவர் முழுமையாக கவனம் செலுத்தி வரும் துறையாக இருப்பது கார் ரேசிங்.

அவர் சமீபத்தில் ‘Ajith Kumar Racing’ என்ற பெயரில் தனது சொந்த கார் ரேசிங் நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார். இது வெறும் பெயருக்கான முயற்சியாக இல்லாமல், முழுமையாக தொழில்முறை ரீதியில் செயல்படும் ஒரு ரேசிங் டீமாக உருவெடுத்துள்ளது.
இந்த அணியின் மூலம் அவர் துபாய், பெல்ஜியம் உள்ளிட்ட பல நாடுகளில் நடைபெற்ற சர்வதேச கார் பந்தயங்களில் கலந்து கொண்டு, பரிசுகளையும் வென்று சாதனை படைத்துள்ளார்.
ஒரு இந்திய நடிகர், அதுவும் தமிழ் திரையுலகை சேர்ந்த ஒருவர், உலக அளவில் கார் ரேசிங் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவது என்பது அரிதான விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சமீபத்தில் அபுதாபியில் உள்ள யாஸ் மெரினா சர்க்யூட்டில் நடைபெற்ற கார் ரேசிங் நிகழ்வின்போது, எடுக்கப்பட்ட ஒரு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ரேசிங் நடைபெறும் இடத்தில் ரசிகர்கள் அதிகமாக கூச்சலிட, ஒழுங்கை மீற முயற்சிப்பதை பார்த்த அஜித், அவர்களிடம் நேரடியாக கடிந்து கொள்கிறார்.
அந்த வீடியோவில், “ப்ளீஸ்… ஒழுங்கா நடந்துக்கங்க… இது தியேட்டர் கிடையாதுங்க…” என்று மிகவும் தெளிவாகவும், அதே நேரத்தில் அமைதியாகவும் கூறும் அஜித்தின் குரல் பதிவாகியுள்ளது.
வழக்கமாக அமைதியானவர், பொதுவெளியில் அதிகமாக பேசாதவர் என்ற பெயர் கொண்ட அஜித், இந்த சம்பவத்தில் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு குறித்த தனது கவலைகளை வெளிப்படுத்தியதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

கார் ரேசிங் என்பது மிக அதிகமான கவனம், கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் விளையாட்டு. சிறிய கவனச்சிதறலும் பெரிய விபத்துக்கு வழிவகுக்கும் சூழ்நிலையில், ரசிகர்கள் சினிமா தியேட்டரில் போல ஆரவாரம் செய்வது ஆபத்தானது என்பதை உணர்த்தவே அஜித் இவ்வாறு கூறியதாகவும், பலர் இந்த வீடியோவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். “இது ஹீரோ இமேஜுக்காக அல்ல, அனைவரின் பாதுகாப்புக்காக சொன்ன வார்த்தை” என்றே ரசிகர்கள் இதை புரிந்து கொண்டுள்ளனர்.
அதே நேரத்தில், சிலர் இதனை தேவையற்ற சர்ச்சையாக மாற்ற முயற்சித்தாலும், பெரும்பாலான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள், அஜித்தின் இந்த செயல்பாட்டை பொறுப்பான ஒரு விளையாட்டு வீரரின் அணுகுமுறை என பாராட்டி வருகின்றனர். “நடிகராக இருந்தாலும், ரேசிங் ட்ராக்கில் அவர் ஒரு ரேசர் மட்டுமே” என்ற கருத்து அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
43 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
2 hours ago
3 hours ago