Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
George / 2016 ஜனவரி 11 , மு.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் சினிமாவின் பல்துறை வித்தகரான கமல்ஹாசனுக்கு தற்போது புதிய கௌரவம் கிடைக்க போகிறது.
சினிமாவை பற்றிய பல அரிய விடயங்களை தெரிந்து வைத்திருக்கும் கமல்ஹாசன், இந்திய சினிமா மட்டுமல்லாது, உலக சினிமாவை பற்றியும் நன்கு அறிந்தவர். தமிழ் சினிமாவின் உலகநாயகனாக வலம் வரும் கமல்ஹாசனுக்கு இப்போது ஒரு புதிய கௌரவம் கிடைக்க போகிறது.
அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் கமல் உரையாற்ற உள்ளமையே அந்த புதிய கௌரவமாகும்.
பெப்ரவரி 6ஆம் திகதி நடைபெற உள்ள விழாவில், நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு, உரையாற்றவுள்ளார். இவ்விழாவுக்கு அழைக்கப்பட்டு உள்ள முக்கிய பேச்சாளர்களில் கமலும் ஒருவர்.
இதன் மூலம் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றும் முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை கமல் பெற உள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
29 minute ago
1 hours ago