Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 21 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிக்பாஸ் வீட்டில் கவின் - சாக்சி காதல் நாடகம் சில நாட்கள் இருந்து வந்த நிலையில் திடீரென லொஸ்லியா நுழைந்ததால் முக்கோண காதலாக மாறியது.
இதனையடுத்து பிக்பாஸ் வீட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், சாக்சி வெளியேறிய பின்னரும், லொஸ்லியா தன்னுடைய லிமிட் என்ன என்பதை விளக்கிய பின்னரும் இந்த பிரச்சினை ஒருவழியாக முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் கவின் - லொஸ்லியா காதல் மலர்வது போல் தெரிகிறது.
இன்றைய அடுத்த புரமோவில் கவின் காதல் டயலாக் பேசுவதும் அதற்கு லொஸ்லியா வெட்கப்படுவதையும் பார்க்கும்போது இருவரும் வெளியே செல்லும்போது ஜோடிகளாகத்தான் செல்வார்கள் என தெரிகிறது.
ஏற்கெனவே நேற்று முன் தினம் நள்ளிரவு வரை லொஸ்லியாவுடன் கவின் பேசிக்கொண்டிருந்ததை சாண்டி கண்டித்தார்.
மீண்டும் பிறர் குறைகூறும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம் என்றும், பிக்பாஸ் வீட்டிற்கு எதற்கு வந்தோமோ அந்த வேலையை மட்டும் பார்த்துவிட்டு செல்லும்படி கூறினார்.
ஆனால் சாண்டியின் அறிவுரையை கேட்கும் மனநிலையில் கவின், லொஸ்லியா இருவருமே இல்லை என்பது தெரிகிறது.
#Day59 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/hQtYiyhVwz
— Vijay Television (@vijaytelevision) August 21, 2019
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago