Editorial / 2020 மே 15 , பி.ப. 01:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
உண்மை காதல் இன்னமும் இருக்கிறது என, நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார். நடிகை த்ரிஷா, இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களுடன் உரையாடிய போது, பல கேள்விகளுக்கு வெளிப்படையாக பதில் கூறினார்.
த்ரிஷாவின் முன்னாள் காதலராக குறிப்பிடப்படும் நடிகர் ராணாவுக்கு திருமணம் உறுதியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் பலர் திரிஷாவிடம் காதல் பற்றிய கேள்விகளையே முன் வைத்தனர்.
ரசிகர் ஒருவர், "வாழ்க்கையின் காதலை சந்தித்து விட்டீர்களா?” என கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த த்ரிஷா, "இப்போது அப்படி ஒன்றை நான் சந்திக்கவில்லை” என்றார்.
பின்னர் மற்றொரு கேள்விக்கு, “காதல் ஒரு பட்டாம்பூச்சி போன்ற உணர்வை கொடுக்கும். உண்மை காதல் இன்னமும் இருக்கிறது. உண்மையாக, பைத்தியக்காரத்தனமாக, ஆழமாக உன்னைவிட்டு இருக்க முடியாது என்பது மாதிரியான காதல் இன்னமும் இருக்கிறது. அப்படியான ஒரு காதலை அடையும்வரை நாம் காத்திருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
43 minute ago
47 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
47 minute ago
1 hours ago
4 hours ago