Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2023 ஒக்டோபர் 30 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
2005ம் ஆண்டு திரையுலகில் எஸ்.ஜே.சூர்யாவின் ‘அன்பே ஆருயிரே’ படம் மூலமாகத் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை நிலா. மீரா சோப்ரா என்ற இயற்பெயரை கொண்ட இவர் பிரபல பாலிவுட் நடிகைகளான பிரியங்கா சோப்ரா மற்றும் ப்ரனிதி சோப்ராவின் உறவினர்.
இவர், ’மருதமலை’, ‘ஜாம்பவான்’, ‘லீ’ உள்ளிட்டப் படங்களில் நடித்தார். இந்த சூழலில் ’ஜாம்பவான்’ படத்தில் நடித்தபோது குளியல் காட்சியில் நடிக்க நிலா 12,000 லீட்டர் மினரல் வாட்டர் கேட்டு பிரச்சினை செய்ததாக அந்தப் படத்தின் இயக்குநர் நந்தகுமார் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், "ஜாம்பவான் படத்தின் ஒரு காட்சியை குற்றாலத்தில் எடுத்தோம். குற்றாலத்திற்கு கீழே 12,000 லீட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியில் நிலாவும் அவரது தோழிகளும் குளிப்பது போன்றும், அப்போது பிரசாந்த் அங்கு வந்ததும் தோழிகள் ஓடிவிட நிலா அந்த தொட்டிக்குள் மூழ்குவது போன்ற காட்சி அது.
இந்தத் தண்ணியில் நான் குளிக்கமாட்டேன். அப்படி நான் இங்கு குளிக்க வேண்டும் என்றால் இங்கு மினரல் வோட்டர் ஊற்றுங்கள் என்றார். அது 12,000 லீட்டர் கொள்ளளவு கொண்டது. அதற்கு நாங்கள் மறுக்க, ஷூட்டிங்கிலிருந்து பாதியில் கிளம்பிவிட்டார் நிலா.
இதோடு நில்லாமல், என் மீது பாலியல் குற்றச்சாட்டும் பரப்பினார். இதற்கிடையே எஸ்.ஜே.சூர்யாவும், தயாரிப்பாளர் தியாகராஜனும் பேசியதை அடுத்து, ‘நிலா நான் இந்தியாவுக்குள் நடிக்கமாட்டேன். பாங்காக்கில் வேண்டுமென்றால் நடிக்கிறேன்’ எனக் கூறினார். இதையடுத்து பாங்காக்கில் சென்று அந்தக் காட்சியை எடுத்தோம்" எனக் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
56 minute ago
1 hours ago
3 hours ago