George / 2016 செப்டெம்பர் 29 , மு.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
'ஏழு வருடங்களாக இருந்த காதல் உறவை, ஒருவர் உடைத்து விட்டார்' என, நடிகை வரலட்சுமி கூறியுள்ளார்.
சினிமா வட்டாரத்தில், அடிக்கடி பேசப்பட்ட விஷால் - வரலட்சுமி காதல் விவகாரம், நேற்று மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.
'ஏழு வருடங்களாக இருந்த எங்களுடைய காதல் உறவை, ஒருவர் உடைத்து விட்டார். அந்த செய்தியை, தன்னுடைய மேலாளர் மூலமாக சொல்லி அனுப்பியுள்ளார். உலகம் எங்கே போகிறது; காதல் எங்கே இருக்கிறது' என, டுவிட்டரில் வரலட்சுமி பதிவு செய்துள்ளார்;.
இது, விஷாலுடன் உள்ள காதல் முறிந்து விட்டதை, வெளிச்சம் போட்டு காட்டுவதாக உள்ளது. இதுவரை விஷாலும், வரலட்சுமியும் காதலை வெளிப்படையாக கூறவில்லை; ஆனால், இருவரின் நட்பு, நெருக்கமான புகைப்படங்கள், காதலை காட்டியது. காதலன்; யார் என்பதை கூறாத வரலட்சுமி, காதல் முறிந்ததை மட்டும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

9 minute ago
17 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
17 minute ago
19 minute ago