Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 செப்டெம்பர் 08 , மு.ப. 08:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே 70 சதவீதம் முடிந்துவிட்ட நிலையில் இந்தத் திரைப்படத்தின் மொத்தப் படப்பிடிப்பு, எதிர்வரும் ஒக்டோபருக்குள் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது. இந்தத் திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் வெளியீடு என்று முடிவு செய்யப்பட்டுவிட்டதால் திரைப்படக்குழுவினர், இரவு பகலாகப் படப்பிடிப்புகளில் தீவிரமாக உள்ளனர்.
இந்நிலையில், விஜய்யின் 61ஆவது திரைப்படத்தை இயக்குபவர் யார் என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது. விஜய்யின் அடுத்த திரைப்படத்தை அட்லி இயக்குவார் என்றும் இந்தத் திரைப்படத்தை சிவாஜி புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என்றும் ஏற்கெனவே செய்தி வெளியானது.
இந்த நிலையில் அண்மையில் பிரபல இயக்குநர் செல்வராகவன், விஜய்யை நேரில் சந்தித்துக் கதை கூறியதாகக் கூறப்படுகிறது. செல்வராகவனின் கதையைக் கேட்ட விஜய், என்ன பதில் கூறினார் என்பது இதுவரை தெரியவில்லை.
இருப்பினும், செல்வராகவனின் தரம் மற்றும் விஜய்யின் மாஸ் ஒருங்கே இணைந்தால் தமிழ் சினிமாவின் மிக முக்கிய திரைப்படமாக இது கருதப்படும்.
12 minute ago
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
2 hours ago
2 hours ago
5 hours ago